ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: மூவர் கைது..!

ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: மூவர் கைது..!

கைது செய்யப்பட்ட மூவரையும் படத்தில் காணலாம்.

ஈரோட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட மரப்பாலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு 70 மூட்டைகளில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1,025 கிலோ குட்கா பொருட்களை இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மளிகை கடை நடத்தி வரும் கருங்கல்பாளையம் கே.எஸ்.நகரைச் சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், ரங்கம்பாளையம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் திருப்பதி உட்பட அவருடன் இருந்த கருங்கல்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த முகமது ஜீபேர் (வயது 35), கிருஷ்ணாம்பாளையம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 37) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருப்பதி மேல் ஏற்கனவே குட்கா பொருட்கள் குறித்து வழக்குப்பதிவு இருப்பதுடன் மரப்பாலம் பகுதியை சேர்ந்த முகமது ஜீபேர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் வாங்கி மாணிக்கம் மூலம் விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story