ஈரோட்டில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் குருபூஜை விழா

ஈரோட்டில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் குருபூஜை விழா
X

ஈரோடு பாப்பாத்திக்காட்டில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் அழகு முத்துக்கோனின் குருபூஜை விழா கொண்டாடிய போது எடுத்த படம்.

ஈரோட்டில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் குருபூஜை குருபூஜை விழா நேற்று (11ம் தேதி) கொண்டாடப்பட்டது.

Erode News - ஈரோட்டில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் குருபூஜை விழா நேற்று (11ம் தேதி) கொண்டாடப்பட்டது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 267வது குருபூஜை விழா நேற்று (11ம் தேதி) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாடு யாதவ மகாசபை தலைமையாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் குருபூஜை விழா ஈரோடு பாப்பாத்திக்காட்டில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, தலைவர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமார் முன்னிலை வைத்தார்.

இதில், பொருளாளர் பன்னீர்செல்வம் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, போஜமகாராஜான், ஆலோசகர் பாண்டியன் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் கிரீன் பார்க் வெங்கடேஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அழகு முத்து கோனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தமிழ்நாடு யாதவ மகாசபை மாவட்ட ஒன்றிய நகர கிராம நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business