ஈரோடு மாவட்டத்தில் வரும் 30ம் தேதி கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 30ம் தேதி கிராம சபைக் கூட்டம்
X

Erode News-ஈரோடு மாவட்டத்தில் வரும் 30ம் தேதி கிராம சபைக் கூட்டம்

Erode News- ஈரோடு மாவட்டத்தில் வரும் 30ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Erode News, Erode News Today- ஈரோடு மாவட்டத்தில் வரும் 30ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (27ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் டிக்ளரேஷன் ஆஃப் ஓடிஎப் பிளஸ் மற்றும் ஹர் கர் ஜல் ஊராட்சிகள் செயல்படுத்துதல் தொடர்பாக வரும் 30ம் தேதியன்று காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை உறுதி செய்யும் பொருட்டு ஆஸ்பிரிங் என வகைபடுத்தப்பட்ட 28 கிராம ஊராட்சிகளை ரைசிங் நிலைக்கும் 119 கிராம ஊராட்சிகளை ஓடிஎப் பிளஸ் மாடல் நிலைக்கும் கொண்டு செல்லவும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும், குடிநீர் இணைப்பில் தன்னிறைவு நிலை அடைந்த 45 கிராம ஊராட்சிகளில் ஹர் கர் ஜல் ஊராட்சிகள் என தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்படாத கிராம ஊராட்சிகள் ஹர் கர் ஜல் ஊராட்சிகள் என தீர்மானம் நிறைவேற்றிடவும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் கிராம ஊராட்சிகளில் கூட்டம் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம சபை நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!