கோபியில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை அபகரிக்க ரவுடியாக மாறிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்

கோபியில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை அபகரிக்க ரவுடியாக மாறிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்
X

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த அரசுப்பள்ளி ஆசிரியை பிரபா.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீடு புகுந்து பொருட்களை சூறையாடி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு அரசுப் பள்ளி ரவுடி தலைமை ஆசிரியர் மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோபி அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீடு புகுந்து பொருட்களை சூறையாடி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு அரசுப் பள்ளி ரவுடி தலைமை ஆசிரியர் மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள நஞ்சப்பா நகரைச் சேர்ந்தவர் பிரபா (வயது 48). கோபி வண்ணாந்துறைப்புதூர் அரசுப் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், நான் ஈரோடு மாநகராட்சி பெரியார் வீதியில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமசாமியிடம், வீட்டை அடமானமாக வைத்து ரூ.15 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றேன். அசலையும், வட்டியையும் திருப்பி செலுத்திய நிலையில், வீட்டு ஆவணங்களை திருப்பி தராமல் வீட்டை அபகரிக்க முயன்று வருகிறார்.

இதுதொடர்பாக, ஜூன் 19ம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முத்துராமசாமி மீது பிரபா புகார் அளித்தார். ஆனால், முத்துராமசாமி அளித்த பொய் புகாரில், கோபிசெட்டிபாளையம் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், கடந்த 16ம் தேதி தனது ஆட்களுடன் என் வீட்டிற்கு சென்ற முத்துராமசாமி, வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளார். மேலும் வீட்டில் இருந்த எனது தாயார் மற்றும் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். (இதுதொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளன).

எனது வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பாக நான் கொடுத்து புகாரின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் போலீசார் முத்துராமசாமி மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, எனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, எனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த முத்துராமசாமி, அவருடன் வந்தவர் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன். எனது வீட்டையும் திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி கற்பித்து நல்வழிப்படுத்தும் தலைமை ஆசிரியர் ஒருவரே வீட்டை அபகரிக்கும் முயற்சியில் சக பெண் ஆசிரியையின் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Tags

Next Story
ai marketing future