சத்தி அருகே திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து - கார் மோதி விபத்து
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து - கார் மோதி விபத்துக்குள்ளானது.
HIGHLIGHTS

விபத்துக்குள்ளான அரசு பேருந்து - கார்.
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து - கார் மோதி விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் கார், பேருந்து, லாரி, சரக்கு வேன் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தை டிரைவர் மோகன்ராஜ் ஓட்டினார்.
அதே சமயம், எதிரே மைசூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த காரை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் ஓட்டி வந்துள்ளார். அப்போது, 13வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனங்களை நகர்த்தி போக்குவரத்தை சரி செய்தனர். இவ்விபத்து, குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.