அந்தியூர் அருகே அரசு பேருந்து - சரக்கு வாகனம் மோதி விபத்து: பயணி உள்பட 2 பேர் காயம்..!

அந்தியூர் அருகே அரசு பேருந்து - சரக்கு வாகனம் மோதி விபத்து: பயணி உள்பட 2 பேர் காயம்..!
X

விபத்துக்குள்ளான அரசு பேருந்து - சரக்கு வாகனம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசு பேருந்தும், சரக்கு வாகனமும் நேற்று (8ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை இரவு மோதி விபத்துக்குள்ளானதில் பயணி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

அந்தியூர் அருகே அரசு பேருந்தும், சரக்கு வாகனமும் நேற்று (8ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை இரவு மோதி விபத்துக்குள்ளானதில் பயணி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பவானி பருவாச்சி வழியாக அரசு பேருந்து ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை அந்தியூர் சங்கராபாளையத்தைச் சேர்ந்த சம்பத் (வயது 54) என்பவர் ஓட்டினார். நடத்துநராக பவானி வெள்ளாளபாளையம் ஏ.கட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளையபிரகாஷ் (வயது 30) என்பவர் இருந்தார்.

இந்நிலையில், பேருந்து பருவாச்சி பேருந்து நிறுத்தம் சென்ற போது அம்மன்பாளையம் சாலையில் இருந்து கார் ஒன்று வந்துள்ளது. இதற்கு, பேருந்து ஓட்டுநர் வழிவிட பேருந்தை நிறுத்தி உள்ளார். அப்போது, எதிர்திசையில் பவானி இருந்து அந்தியூர் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தின் முன்பக்கம் சேதமானது கண்ணாடி உடைந்தது. மேலும், சரக்கு வாகனத்தின் முன்பக்கமும் விபத்தில் சேதமானது. விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஜம்பை பகுதியைச் சேர்ந்த முகமது பாரூக், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் கணேசன் ஆகியோர் காயமடைந்தனர். இவ்விபத்து, குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil