அந்தியூரில் அரசு கலை கல்லூரி அறிவிப்பு: திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அந்தியூரில் அரசு கலை கல்லூரி அறிவிப்பு: திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாக உள்ளது. இதனையடுத்து, அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்தினார்.

அதன் பயனாக, அந்தியூரில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என, தமிழக சட்டப் பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்தார். இதனை வரவேற்று அந்தியூர் பேருந்து நிலையம் எதிரில் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் பேரூர் கழக துணைச் செயலாளர் ஏ சி பழனிச்சாமி, கெட்டிசமுத்திரம் முன்னாள் ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!