கோபியில் விஷ பூச்சி கடித்து வாலிபர் பலி

கோபியில் விஷ பூச்சி கடித்து வாலிபர் பலி
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே விஷ பூச்சி கடித்து வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அயலூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 23) பனியன் கம்பெனி டெய்லர். அதே பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு காலைக்கடன் கழிக்க சென்றார். அப்போது விஷப்பூச்சி ஏதோ கடித்ததாக சத்தமிட்டார். அவரின் நண்பர்கள் தாகம் தணிக்க தண்ணீர் கொண்டு வருவதற்குள் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் நடராஜ் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு