நம்பியூர் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நம்பியூர் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X
நம்பியூர் அருகே, தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்; இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர்மேட்டை சேர்ந்தவர் தன்ராஜ். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்று விட்டு வந்த தன்ராஜ், அதிக மதுபோதையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், நேற்று காலை தன்ராஜை வேலைக்கு அழைத்து செல்ல காளியம்மன்நகரை சேர்ந்த குமார் என்பவர் தன்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போதுதான் தன்ராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தன்ராஜ் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story