டி.என் பாளையத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

டி.என் பாளையத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
X

கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்.

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள டி.என் பாளையம் பகுதியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய பிரியா (45). இவருக்கும் அருள் சிவக்குமார் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு சாம் (10) என்ற மகனும், துதி (4) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கோவை பேரூர் பகுதியில் வசித்து வந்தனர். விஜயபிரியா கடந்த 6 மாதமாக டி.என்.பாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அதிகாலையில் விஜய பிரியா மற்றும் அவரது 4 வயது மகள் துதி இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர்.

இதையடுத்து விஜய பிரியாவும் குழந்தை துதியும் காணாததால் வீட்டில் இருந்தவர்கள் அவர்களை தேடினர். இந்நிலையில் டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் அருகேயுள்ள கிணற்றில் விஜய பிரியா பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பங்களாப்புதூர் போலீசார் மற்றும் கோபி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விஜய பிரியாவின் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜய பிரியாவின் 4 வயது மகளையும் காணவில்லை. ஒருவேளை விஜயபிரியா தனது மகள் துதியையும் கிணற்றில் வீசி விட்டு பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் தொடர்ந்து குழந்தையை தேடி வருகின்றனர். மேலும் விஜயபிரியா தற்கொலைக்கான காரணம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!