/* */

கோபியில் விளைபொருட்களை சேமித்து வைக்க குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கு

கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை இருப்பு வைக்க, சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கோபியில் விளைபொருட்களை சேமித்து வைக்க குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கு
X

கோப்பு படம்

கோபி, சத்தி மெயின் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகளும், வியாபாரிகளும் விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இந்த விற்பனைக்கூடத்தில் 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு வசதி 2-ம், 30 மெட்ரிக் டன் கிடங்கு ஒன்றும் உள்ளது.

இந்த விற்பனைக்கூடத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க விவசாயிகளிடம் இருந்து வாடகை வசூலிக்கப்படுகிறது. இதில் அனைத்து வகையான விவசாய விளைபொருட்களுக்கும் (மஞ்சள் தவிர) குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 5 காசும், மஞ்சளுக்கு மட்டும் குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 20 காசும் சேமிப்பு வாடகையாக வசூல் செய்யப்படுகிறது.

இதேபோல் வியாபாரிகள் அனைத்து விவசாய விளைபொருட்களை (மஞ்சள் தவிர) சேமித்து வைக்க குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 10 காசும், மஞ்சளுக்கு மட்டும் குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 40 காசும் வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. அனைத்து விவசாய விளைபொருட்களையும் 150 நாட்கள் வரை சேமிக்கலாம். மஞ்சளை மட்டும் 365 நாட்கள் வரை சேமிக்கலாம். விவசாயிகளுக்கு முதல் 15 நாட்களுக்கு வாடகை ஏதும் கிடையாது.

சேமித்து வைக்கப்படும் விவசாய விளைபொருட்களுக்கு பொருளீட்டுக்கடனாக விளைபொருட்களின் 50 சதவீதத்துக்கு விவசாயிகளுக்கு, அதிகபட்சமாக 5 சதவீத வட்டியுடன் 3 லட்சம் வரையும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டியுடன், 2 லட்சம் வரை கடன் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் உலர்கள வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அளுக்குளி பிள்ளையார் கோவில் துறை பகுதியில் 1000 மெட்ரிக் டன் குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதியும் உள்ளது. இந்த சேமிப்பு கிடங்குகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று, அதன் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Oct 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!