30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய வேமாண்டம்பாளையம் குளம்

30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய வேமாண்டம்பாளையம் குளம்
X

குளத்தில் இருந்து வெளியேறிய நீர் நம்பியூர்-புளியம்பட்டி சாலையில் ஆற்று வெள்ளம் போல் ஓடியது.

நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் குளம் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.

நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 48 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. கடந்த சில தினங்களாகவே நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேமாண்டம்பாளையம், எம்மாம்பூண்டி, வரப்பாளையம், சாவக்கட்டுபாளையம், ஆவரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் வேமாண்டம்பாளையம் குளம் நேற்று நிரம்பியது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் நம்பியூர்-புளியம்பட்டி சாலையில் ஆற்று வெள்ளம் போல் ஓடியது. இதனால் அந்த ரோட்டில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, 'கடந்த 30 வருடத்தில் இல்லாத அளவுக்கு தற்போது மழை பெய்துள்ளது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

Tags

Next Story
ஈரோட்டில் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் தெரியுமா?