கோபிச்செட்டிப்பாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்
X

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். 

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தை சேர்ந்தவர் மதன்.இவர் சிங்கிரிபாளையம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த காசிபாளையத்தை சேர்ந்த ஜீவா என்பவர் இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த போது இரண்டு இரு சக்கர வாகனஙகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஜீவாவுடன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து வந்த மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த முருகேசன் உட்பட்ட 3 மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் கோபி அரசு மருத்துவமனையில் 3 பேரையும் அனுமதித்தனர். மதன் என்பவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!