சட்டவிரோதமாக மது விற்பனை: 2பேர் கைது -1527 மது பாட்டில்கள் பறிமுதல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுதத்தப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து தேனீர் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சட்டவிரோத செயல்கள் மற்றும் ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்தும் ரோந்து சென்றும் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பங்களாபுதுார் லட்சுமிநகர் பாரதி வீதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மறைத்து வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்த ராஜா(எ)ராசு(51), பிரதாப்(30) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த180 ML அளவு கொண்ட 1396மதுபாட்டில்கள், 360 ML கொண்ட 51 மதுபாட்டில்கள் மற்றும் 80பீர் பாட்டில்கள் என மொத்தம் 1527 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குபதிவு செய்து சிறைக்காவலுக்கு அனுப்பினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu