கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
X

கொடிவேரி அணை.

பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கொடிவேரி அணையில் தண்ணீர் பெருக்கெடுப்பு.

பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் கோபி, சத்தி, நம்பியூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள்.மேலும் கோவை, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தடுப்பணையில் குளித்து விட்டு, இங்கு மீன் வகைகளை ருசித்து சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம். இதற்காக தினமும் பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணையில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அணைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் அணைக்கு வந்தனர். அணையின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!