கோபிச்செட்டிப்பாளையம் அருகே 9-ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே 9-ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே நண்பர்களுடன் வாய்க்காலில் குளிக்க சென்ற 9-ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

கோபி அருகே உள்ள சிறுவலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் சபரி என்ற இளங்கோ. இவர் கெட்டிசெவியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளங்கோ தனது நண்பர்களுடன் செட்டியாம் பாளையம் காரைப்பள்ளம் வாய்க் காலுக்கு குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. அவரது தந்தை துரைசாமி அக்கம் பக்கம் விசாரித்தும், வாய்க்கால் அருகே தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவன் இளங்கோவின் தந்தை சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று பெருமாள்கோயில் புதூர் வாய்க்காலில் மாணவன் உடல் கரை ஒதுங்கியது. மேலும் போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture