மாநில தடகளப் போட்டி: கோபி கலை கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கம்

மாநில தடகளப் போட்டி: கோபி கலை கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கம்
X

கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர்.

கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர்.

கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர். சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோபிசெட்டிபாளையம் கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவர் எஸ்.அஜித்குமார் 10,000 மீட்டர் நடையோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், எம்.ராம்பிரகாஷ் வெள்ளிப் பதக்கத்தையும், மாணவி சி.திவ்யா 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

திவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் மாணவி திவ்யா, ஆண்கள் பிரிவில் மாணவர் ஆர்.தருண் ஆகியோர் முதல் பரிசை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி மணவ,சார்பில் தடகளப் பயிற்சியாளர் மு.சு.கண்ணனையும் கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் பி.கருப்பணன், செயலாளர், தாளாளர் எம்.தரணிதரண், கல்லூரி வாழ்த்து தெரிவித்தனர்.

வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளையும், முதல்வர் வீ.தியாகராசு, முதன்மையர் ஆர்.செல்லப்பன், உடற்கல்வி இயக்குநர் மா.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து பெற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!