நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் : ஸ்டாலின்

நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் : ஸ்டாலின்
X

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளா் மணிமாறன், அந்தியூா் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளா் வெங்கடாசலம், பவானி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளா் துரைராஜ், பவானிசாகா் சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ் கட்சி வேட்பாளா் சுந்தரம் ஆகியோரை ஆதாரித்து திமுக தலைவா் ஸ்டாலின் கோபிசெட்டிபாளையம் கச்சோரிமேடு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்பொழுது பேசுகையில்,கலைஞர் மகன் நான் சொல்வதை தான் செய்வோம். அந்தியூர் காவேரி கூட்டு குடிநீர் அமைக்கப்படும். அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும். பவானியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படும் குப்பை வரி ரத்து செய்யப்படும். நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி தொடங்கப்படும். காஞ்சிபுரத்தில் அண்ணா புடவை பூங்கா மீண்டும் தொடங்கப்படும். ஜவுளி ஆணயம் அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்க்கு 4 லட்சமாக உயர்த்தப்படும். அரசு இலவச சீருடை தைப்பதை நெசவாளர்களுக்கே வழங்கப்படும். பெட்ரோல் ரூபாய் 5 விலையும், டீசல் ரூபாய் 4 விலையும் குறைக்கப்படும். அரசு காலிபணியிடங்கள் தமிழர்களை கொண்டு நிரப்பப்படும். கோவில் பணியாளர்களாக 25 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். என பேசினார்.

Tags

Next Story