கோபி அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோபி அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

கோபி அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபி அருகே உள்ள குருமந்தூர்மேட்டை சேர்ந்தவர் குழந்தைவேல். விவசாயியான இவருக்கு சந்தோஷ் என்ற மகனும் தட்சன்யா என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தட்சன்யா தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மாதம் வரை இணைய வழியில் கல்வி கற்றுவந்த தட்சன்யா, தற்போது பள்ளி திறக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்போனில் அதிகம் கேம் விளையாடியதால் அவருடைய தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் இரவு முழுவதும் மனவேதனையில் இருந்த தட்சன்யா நேற்று காலை அம்மாவின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். தட்சன்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்ற அவரது தாயார் மற்றும் சகோதரர் சந்தோஷ் தூக்கில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தட்சன்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே தட்சணா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story