மழையால் கோபி அருகே உள்ள சஞ்சீவராயன் குளம் நிரம்பியது

மழையால் கோபி அருகே உள்ள சஞ்சீவராயன் குளம் நிரம்பியது
X

நிரம்பி வழியும் சஞ்சீவராயன் குளம் 

கோபி அருகே உள்ள தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட வனப்பகுதி, மலைகிராமங்களில் பெய்யும் மழை பெருமுகை கிராமத்தில் அமைந்துள்ள சஞ்சீவ ராயன் குளத்திற்கு வந்தடைகிறது.

கோபி அருகே உள்ள தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட வனப்பகுதி, மலைகிராமங்களில் பெய்யும் மழை பெருமுகை கிராமத்தில் அமைந்துள்ள சஞ்சீவ ராயன் குளத்திற்கு வந்தடைகிறது. இக்குளத்தில் கடந்த 3 வருடங்களாக குறைந்த அளவே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நேற்று குளம் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் குளத்தின் மூலம் பாசனம் பெறும் கள்ளிப்பட்டி, கணக்கம் பாளையம், தண்ணீர் பந்தல் புதூர், பெருமுகை, வரப்பள்ளம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோபி கோட்டாட்சியர் பழனி தேவி, வட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று குளத்தையும், தண்ணீர் வெளியேறும் கரும்பாறை மதகு பகுதியையும் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business