கோபியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா

கோபியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா
X

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுகவினர்.

கோபியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்தநாளையோட்டி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் அருகில் கோபி தேவர் பேரவை சார்பாக வைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு கோபி நகர திமுக செயலாளர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாநில விவசாய அணி செயலாளர் கள்ளிப்பட்டி மணி,சிந்து ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன்,கோபி தொகுதி தேவர் பேரவை தலைவர் எம்.என்.நாகராஜ தேவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோபி சட்டமன்ற தொகுதியில் இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச்சிலைக்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மற்றும் கோபி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


விழாவிற்கு பேரவையின் கோபிதாலுகா தலைவர் எம்.என்.நாகராஜதேவர் தலைமை தாங்கினார்.இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, தேவரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள 200 பெண்களுக்கு சில்வர் தட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.சத்தியபாமா, கோபிஒன்றியக்குழு தலைவர் மௌதீஸ்வரன், முன்னாள் நகராட்சி தலைவர் கந்தவேல்முருகன், ஈரோடு மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், நகர செயலாளர் பிரினியோ கணேஷ் தேவர் பேரவை நிர்வாகிகள் எம்.ஆர்.தங்கராஜ், பழனிசாமி, மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்