கோபிச்செட்டிப்பாளையத்தில் நெல் வணிக வளாகம் திறப்பு

கோபிச்செட்டிப்பாளையத்தில்  நெல் வணிக வளாகம் திறப்பு
X

 நெல் வணிக வளாகம்.

கோபிச்செட்டிப்பாளையத்தில், ரூ.22.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெல் வணிக வளாகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் இரு போக நெல் சாகுபடியிலும், மஞ்சள் போன்ற பணப்பயிர் உற்பத்தியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் மஞ்சள் போன்ற விலை பொருட்கள், இருப்பு வைத்து விற்பனை செய்ய போதிய இடவசதி இல்லாத நிலை இருந்து வந்தது.
இதனையடுத்து கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நாதிபாளையத்தில் ரூ.22.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு குடோன்களும் , 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு குடோன் என 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மொத்தம் 3 குடோன்களும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்காத நிலையில், இதுவரை திறப்பு விழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் குத்து விளக்கு ஏற்றினர். தமிழக அளவில் 2-வது மிகப் பெரிய நெல் கொள்முதல் வணிக வளாகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil