கொடிவேரி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடிவேரி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
X

கொடிவேரி தடுப்பணையிலிருந்து 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து இடதுபுறம் அரக்கன்கோட்டை வாய்க்காலும், வலதுபுறம் தடப்பள்ளி வாய்க்காலும் செல்கிறது. இந்த வாய்க்கால்கள் மூலம் மொத்தம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல், வாழை, கரும்பு சாகுபடி செய்துள்ளார்கள். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம்போக பாசனத்துக்காக தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படும்.

இந்தநிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் 2-ம்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 100 அடி கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி கொடிவேரியில் நடந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிட்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!