கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
X

சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார்.

கூகலூர் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள புதுப்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் லோகநாதன் மகன் சரண்விக்னேஷ். இவரும் புதுக்கரைப்புதூரை சேர்ந்த நண்பர் வசந்தகுமார் என்பவருடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கூகலூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சரண்விக்னேஷ் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வசந்தகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!