கோபி அருகே திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

கோபி அருகே திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை
X
கோபி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால், ஏக்கத்தில் வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோபி அருகே நஞ்சகவுன்டன்பாளையம் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் ஆனந்தகுமார், 37 . விவசாய கூலி தொழிலாளியான இருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஷைனிக்கும், 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்குள் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஆனந்தகுமார், தூக்கிட்டு கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஆனந்தகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். .அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ஆனந்தகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!