பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு
X

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மலைப்பாம்பு.

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பபை டி.என்.பாளையம் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைகோட்டை பகுதியில் கோபியைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று மதியம் தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஒருவிதமான சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து கண்ணப்பன் சென்று பார்த்தபோது மலைப்பாம்பு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்றரை அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்டு நவகிணறு மாதையன் கோவில் வனப்பகுதியில் சென்று மலைப்பாம்பை விட்டனர்.

Tags

Next Story
ai business transformation