பங்களாப்புதூர் அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பங்களாப்புதூர் அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பங்களாபுதூர் காவல் நிலையம்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பங்களாப்புதூரில் தனியார் கல்லூரி அருகில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் டி.என்.பாளையம் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று லட்சுமணன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதால் மனைவியுடன் மீண்டும் தகராறு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறிய லட்சுமணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் இன்று காலை பங்களாப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பங்களாப்புதூர் காவல்துறையினர் லட்சுமணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!