நம்பியூர் அருகே இளம்பெண் தற்கொலை

நம்பியூர் அருகே இளம்பெண் தற்கொலை
X

நம்பியூர் காவல் நிலையம். 

நம்பியூர் அருகே திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார் ( வயது 23) இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சவுமியா ( வயது 21) என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 25.2.2015 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு இவர்கள் 2பேரும் நம்பியூர், பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தனர். சிவக்குமார் கூலி வேலைக்கு சென்று வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் சிவக்குமார் வேலைக்கு சென்று விட்டார்.

அப்போது அவரது மனைவி சவுமியா அவரை தொடர்பு கொண்டு தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சிவக்குமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது விஷம் குடித்து தற்கொலை முயன்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் சவுமியாவை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கடந்த சிகிச்சையில் இருந்து வந்த சவுமியா நேற்று இரவு பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 7 ஆண்டிற்குள் இளம்பெண் இறந்ததால் இது குறித்து கோபி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்த உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!