கோபி செட்டிப்பாளையம் தினசரி அங்காடி கட்டுமான பணிக்கு பூமி பூஜை

கோபி செட்டிப்பாளையம் தினசரி அங்காடி கட்டுமான பணிக்கு பூமி பூஜை
X

கோபி  செட்டிப்பாளையம் தினசரி அங்காடி கட்டுமான பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார்.

கோபிச்செட்டிபாளையம் நகராட்சி பகுதியில் புதிய தினசரி அங்காடி கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.699.78 லட்சம் மதிப்பீட்டில் தினசரி அங்காடி கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்.சு.முத்துசாமி பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். உடன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ,ஈரோடுவடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், கோபிசெட்டிபாளையம் ஆணையாளர் பிரேம் ஆனந்த் . நகர தி.மு..க. செயலாளர் என்.ஆர்.நாகராஜ், அரசு அதிகாரிகள், கூட்டணிக் கட்சி மாவட்ட செயலாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!