ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: கொடிவேரி அணையில் குவிந்த மக்கள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: கொடிவேரி அணையில் குவிந்த மக்கள்
X

கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்.

ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வரும் நிலையில், கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொடிவேரி அணையிலும் வெள்ளப்பெருக்கு உண்டானது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொடிவேரி அணை பகுதியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதைத்தொடர்ந்து கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறையினர் அனுமதி அளித்தனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைில் குவிந்தனர். அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!