தடப்பள்ளி வாய்க்கால் சரி செய்யும் பணி தீவிரம்

தடப்பள்ளி வாய்க்கால் சரி செய்யும் பணி தீவிரம்
X

தட்டப்பள்ளி வாய்க்காலை சரி செய்யும் பணியாளர்கள். 

தடப்பள்ளி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 ம் தேதி இரவு கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது. அதன் எதிரொலியாக கோபி வழியாகச் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடப்பள்ளி வாய்க்காலில் மழை நீர் மற்றும் கீழ்பவானி கசிவு நீர் சேர்ந்ததால் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக தடப்பள்ளி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.தற்போது பொதுப் பணித் துறையினர் போர்க் கால அடிப்படையில் உடைப்புப் பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களை வேளாண்மைத்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது: கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் சில நாற்றாங்கால் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. நெல் நடவுப் பணிகள் இன்னும் துவங்கப்படாததால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!