கோபியில் விடிய விடிய மழை : அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகள் நனைந்து சேதம்

கோபியில் விடிய விடிய மழை : அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்  முட்டைகள் நனைந்து சேதம்
X

கோபியில் பெய்த மழையால் நனைந்து கிடக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள்.

கோபியில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியுள்ளது.

கோபிச்செட்டிபாளையம் :

கோபி நஞ்சக்கவுண்டன்பாளையத்தில் அரசு நெல் கொள்முதல் மையத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முழுமையாக சோதமடைந்தது. மழையால் நனைந்த நெல்மணிகள் முளைத்து விட்டதால் விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர் .

நஞ்சக்கவுண்டன்பாளையம் அரசு நெல் கொள்முதல் மையம் போதிய இடவசதி இல்லாத நிலையில் தென்னந்தோப்புக்குள் நெல் மூட்டைகள் கொட்டிவைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 1000 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய 10 முதல் 15 நாட்கள் வரை தாமதமாகும். இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள சேதத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil