கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழா
மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோயில் ஈரோடு மாவட்டம், மொடச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
இக்கோயிலில் தான்தோன்றியம்மன், அம்மன் சந்நிதிகளும், விநாயகர் உபசந்நிதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருவிழா நடைபெறுகிறது தேரோட்டம் நடைபெறுகிறது.
கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் அம்மன் சந்நிதி எதிரே 40அடி நீளத்தில் திருக்குண்டம் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்துக்காக, திருப்பணிகள் தொடக்கமாக, கடந்த, 2018 ஜூலையில் பாலாலயம் நடந்தது.
அதன்பின் கடந்த, 2019ல், லோக்சபா தேர்தல் நடத்தை விதி, கொரோனா தொற்று முழு ஊரடங்கு, துறை ரீதியாக அனுமதி கிடைப்பதில் இழுபறி உள்ளிட்ட காரணங்களால், திருப்பணி துவங்குவதில் சிக்கல் நீடித்தது. இதனால், அன்று முதல் இக்கோவிலில், கடந்த நான்காண்டுகளாக, குண்டம் தேர்த்திருவிழா நடக்கவில்லை.
இந்நிலையில், திருப்பணிகள் அனைத்தும் முடிந்து, 23ஆண்டுகளுக்கு பின், மூன்றாவது கும்பாபிஷேக விழா, கடந்த, 11ல் கோலாகலமாக நடந்தது. இதையடுத்து, நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா வரும், 14ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 26ல் சந்தனக்காப்பு அலங்காரம், நேற்று மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை குண்டம் திருவிழா நடந்தது. குண்டத்தில் தலைமை பூசாரி தீமிதித்து துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோபி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 30ல் திருத்தேர் வலம் வருதல், 2023 ஜன., 1ல் தெப்பத்தேர் உற்சவம், 2ல், மறுபூஜை, 6ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu