கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்.

கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்.
X

கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் 

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். அதேசமயம் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கடந்த வருடத்தில் கரட்டடிபாளையம் , ஒத்தக்குதிரை பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
the future of ai in healthcare