கோபி அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

கோபி அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பெரிய கொடிவேரியை சேர்ந்தவர் சம்பத் .தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு 8 மாத ஆண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு கோகிலா பாட்டி வெள்ளையம்மாள் என்பவருடன் பக்கத்து அறையில் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். அதிகாலை கழிவறைக்கு செல்வதாக பாட்டியிடம் கோகிலா கூறி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சம்பத் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோகிலாவை தேடி வருகிறார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!