மூச்சு திணறல் காரணமாக இளம்பெண் உயிரிழப்பு

மூச்சு திணறல் காரணமாக இளம்பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூச்சு திணறலால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபி அருகே காளிசெட்டிபாளையத்தை சேர்ந்த கணேசன் மனைவி பிரியா வயது 35. இவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் பிரியாவை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பிரியாவின் தந்தை கருப்புச்சாமி அளித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாவுக்கு ஒரு மகன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு