Erode Farmer Gets Vasectomy-13 பெற்றுவிட்டு 46 வயதில் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்..! அட நம்ம ஈரோட்டில்தாங்க..!

Erode Farmer Gets Vasectomy-13 பெற்றுவிட்டு 46 வயதில் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்..! அட நம்ம ஈரோட்டில்தாங்க..!
X

Erode Farmer Gets Vasectomy-அறுவைச் சிகிச்சை (கோப்பு படம் )

Erode Farmer Gets Vasectomy- ஈரோடு மாவட்டத்தில் ஒருவர் 13 குழந்தைகளை பெற்றுவிட்டு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்ள அடம்பிடித்தார். அவர் மனைவியின் உடல்நிலையை காரணம்காட்டி அதிகாரிகள் வெற்றிபெற்றனர்.

Erode Farmer Gets Vasectomy-ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி கிராமமான ஒண்ணக்கரையில் வசித்து வரும் பழங்குடி இன மக்களில் ஒருவரான சின்ன மாதையன் (46), அவரது மனைவி சாந்தி(45). அவர்கள் இனத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளக்கூடாது என்பது கோட்பாடு. அதனால் வரிசையாக 13 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

கடைசியாக கடந்த வாரம் சின்னத்தம்பிபாளையம் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஆண் குழந்தையை சாந்தி பெற்றடுத்தார். ஆனால் அவர் உடல் ஆரோக்யம் இல்லாமல் ரத்த சோகை ஏற்பட்டு நலிந்து காணப்பட்டார்.

சின்ன மாதையன் குழந்தைகளுடன் (பழைய படம்)

இந்த சின்ன மாதையனை இப்படியே விட்டால், இன்னும் 5 குழந்தைக்குக் கூட தந்தை ஆவதற்கு தயங்க மாட்டார் என்று முடிவெடுத்த பர்கூர் கிராம நிர்வாக அலுவலர், உள்ளூர் போலீஸ் காவலர்களுடன் சின்ன மாதையனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 'ஐயையோ..எங்க சனத்தில குடும்ப கட்டுப்பாடு பண்றது பாவம்ங்க. அது சாமி குத்தம் ஆயிடும்' என்று சின்ன மாதையன் கூறியதை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவரது மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி நீங்கதான் ஆபரேஷன் பண்ணிக்கணும் என்றனர். ஆனால், கடைசியில் ஈரோடு மருத்துவமனையில் இருந்து மருத்துவர் சக்தி கிருஷ்ணன் நேரடியாக பர்கூர் மலையில் உள்ள ஒண்ணக்கரை மாதையன் வீட்டுக்கு நேரடியாகச் சென்றார்.

அப்போதும், கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தார். மருத்துவர், சின்ன மாதையன் மனைவி சாந்தியின் உடல்நிலை மோசமாக உள்ளது. இன்னொரு குழந்தை பெற்றால் உங்கள் மனைவியை உயிரோடு பார்க்க முடியாது.' என்று மருத்துவர் கூறி அவரை வாசக்டமி ஆபரேஷனுக்கு சம்மதிக்க வைத்தார்.

கடைசியில் நேற்று (2ம் தேதி) அவருக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் வாசக்டமி ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. அன்று மாலையே அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சின்ன மாதையனுக்கு 8 மகன்கள் 5 மகள்கள் உள்ளனர்.

மாவட்ட சுகாதாரத்துறை அவரது குடும்பத்துக்கு 5 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது. அவருக்கு ஆபரேஷன் பண்ணியது லேட் இல்லீங்க..ரொ.......................................................ம்ப லேட். அப்டிதானேங்க..?

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil