நம்பியூரில் மழையின் காரணமாக வீடுகள் சேதம்

நம்பியூரில் மழையின் காரணமாக வீடுகள் சேதம்
X

சேதமடைந்த வீடு.

நம்பியூரில் கன மழையின் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நம்பியூர் பெருமாள் கோவில் வீதி வள்ளியம்மாள் என்பவரின் வீடும், வேம்பாண்டம்பாளையம் பழைய அர்ச்சனா காலனியை சேர்ந்த ரங்கன் மனைவி ராக்கம்மாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. அதேபோல் வேம்பாண்டம்பாளையம் கிராமம் மின்னகாட்டுபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மனைவி ஈஸ்வரி என்பவரது வீடும் கன மழை காரணமாக இடிந்து விழுந்தது.கன மழை காரணமாக இடிந்து விழுந்த வீடுகளை நம்பியூர் வருவாய் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!