சுதந்திர தினம்: ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்பதால், இந்தியா முழுவதும் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார், பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சுதந்திர தினத்தன்று "மது விற்பனை இல்லாத நாளாக" (Dry Day) அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மதுபானக்கடைகள் மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். மேலும் சுதந்திர தினத்தன்று மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu