கோபி அருகே திராவகம் வீசி பெண்ணிடம் நகை பறித்த வியாபாரி கைது

கோபி அருகே திராவகம் வீசி பெண்ணிடம் நகை பறித்த வியாபாரி கைது
X

சீனிவாசன்

கோபி அருகே, வாலிபர் முகத்தில் திராவகம் வீசி, பெண்ணிடம் நகை பறித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி சேவாகவுண்டனூரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 30). இவர், சம்பவத்தன்று இரவு, ஒரு பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு கள்ளிப்பட்டியில் உள்ள, நண்பர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கள்ளிப்பட்டி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, அங்கு வந்த ஒரு மர்மநபர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். பின்னர் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருக்கும் ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். தடுக்க முயன்ற ரகுபதியின் முகத்தில், அந்த நபர் திராவகத்தை வீசிவிட்டு அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மந் பரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் போலீசார், பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒருவரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர், கோபி நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்காட்டையை சேர்ந்த சீனிவாசன் (வயது 38) என்பதும், மளிகைக்கடை வியாபாரியான இவர், வாலிபர் முகத்தில் திராவகம் வீசி பெண்ணிடம் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் கைது செய்து ஒரு பவுன் நகை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!