கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து
X

விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை.

பாரியூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் குளூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவரும் இவருடைய மனைவி நித்யாதேவி இருவரும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து அந்தியூர்க்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பாரியூர் அருகே சென்ற போது எதிரே வந்த கார் தாமரைக்கண்ணன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது‌. இதில் கணவன்-மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதனைத்தொடர்ந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!