கிளை வாய்க்காலில் உடைப்பு: 2 ஆயிரம் ஏக்கர் நடவு முற்றிலும் சேதம்

கோபிசெட்டிபாளையம் , கூகலூர் கிளை வாய்க்காலில் உடைந்து சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நடவு முற்றிலும் சேதமடைந்தது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக ஆண்டுதோறும் இரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் கடந்த மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர், தொட்டிபாளையம், நஞ்சை கோபி, மேவாணி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவு, கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. தடப்பள்ளி வாய்க்காலின் கிளை வாய்க்காலான கூகலூர் கிளை வாய்க்காலில், ஏற்கனவே பாசனத்திற்காக விடப்பட்ட தண்ணீர் செல்லும் நிலையில், மழைநீரும் சேர்ந்ததால், தண்ணீரின் அளவு அதிகரித்ததை தொடர்ந்து தொட்டிபாளையம் என்ற இடத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, வெளியேறும் தண்ணீரால் சுமார் 2 ஆயிரம் ஏக்கில் நடவு பணிகள் செய்திருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து சேதமடைந்தது. வாய்க்கால் கரை உடைப்பு படிப்படியாக உயர்ந்து, தற்போது 20 அடியாக அதிகரித்து வருவதால் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டால் மட்டுமே, கரையை சீரமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.

வாய்க்கால் கரைகள் பராமரிப்பு செய்து பல ஆண்டுகள் ஆனதால் கரை உடைப்பு ஏற்பட்டு வருவதாகவும், வாய்க்கால் கரையை முழுமையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!