காதலன் இறந்த துக்கம்: மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலன் இறந்த துக்கம்: மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
X

பைல் படம்.

காதலன் இறந்த துக்கம் தாங்காமல் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சின்ன செட்டியாபாளையம், ஏ.டி. காலனியைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மகள் மலர்கொடி (வயது 20). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ரஞ்சித்குமாரை மலர்க்கொடி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த மலர்கொடி சம்பவத்தன்று பொள்ளாச்சியில் இருந்து வீட்டுக்கு விடுப்பு எடுத்து வந்துள்ளார்.

பின்னர் மலர்கொடி வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் மகள் வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது மலர்கொடி தூக்குப்போட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலர்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்