கோபி அருகே அரசு பேருந்து - ஆட்டோ மோதி விபத்து: ஓட்டுனர் உயிரிழப்பு

கோபி அருகே அரசு பேருந்து - ஆட்டோ மோதி விபத்து: ஓட்டுனர் உயிரிழப்பு
X

பஸ் மீது மோதி, விபத்தில் சிக்கிய ஆட்டோ.

கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்தும் பயணிகள் ஆட்டோவும் நேருக்குநேர் மோதியதில், ஆட்டோ டிரைவர் பலியானார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சூரியம்பாளையத்தில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஈரோட்டில் இருந்து கோபியை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அதே போல், கோபியில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி பயணிகள் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. பேருந்தும், ஆட்டோவும் சூரியம்பாளையம் என்ற இடத்தில் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரான, கவுந்தப்பாடியை சேர்ந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சண்முகத்தின் உடலை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!