கோபி: ஏர் உழுது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர்

கோபி: ஏர் உழுது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர்
X

ஏர் உழுது விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் ஏர் உழுது விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் ஏர் உழுது விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் ஏப். 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.பி.முருகானந்தம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் காலை சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு பிரசார வாகனத்திற்கு பூஜை செய்து அதில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர், கோபி பேருந்து நிலையம், குள்ளம்பாளையம், சிறுவலூர், கெட்டிச்செவியூர் என பல இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பிரதமர் திட்டங்களை நேரடியாக மக்களிடம் சேர்ப்பேன் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, குள்ளம்பாளையம் பகுதியில் ஏர் உழுது பிரதமர் விவசாயிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயிகளுடன் கலந்துரையாடி தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!