ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்! எப்போது தெரியுமா?

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்! எப்போது தெரியுமா?
X

பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் தலா ஒரு இடத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் புதிய ரேஷன் கார்டு பெற மனு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்றவைகளுக்கு மனு வழங்கலாம். அதன்படி, ஈரோடு வட்டத்தில் சூளை பேருந்து நிறுத்தம் பெரியசேமூர் நியாய விலை கடையில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், பெருந்துறை வட்டத்தில் ஈங்கூர் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் கிருஷ்ணாபுரம் கடையில் உதவி ஆணையர் தலைமையிலும் நடக்க உள்ளது.

மேலும், கொடுமுடி வட்டத்தில் வள்ளிபுரம் கடையில் துணைப்பதிவாளர் தலைமையிலும், கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில் மணியகாரன் புதூர், சிறுவலூர் கடையில் கோபி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நம்பியூர் வட்டத்தில் கோசனம் கடையில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், பவானி வட்டத்தில் பெரியபுலியூர் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையிலும், அந்தியூர் வட்டத்தில் செம்படாபாளையம் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் செல்லிபாளையம் கடையில் தனித்துணை ஆட்சியர் தலைமையிலும், தாளவாடி வட்டத்தில் ஓங்கல்வாடி ஹாசனூர், கடையில் துணைப் பதிவாளர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!