/* */

ஈரோட்டில் பாலினம் அறியும் தடை சட்ட விழிப்புணர்வு பேரணி

ஈரோட்டில் பாலினம் அறிதல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் பாலினம் அறியும் தடை சட்ட விழிப்புணர்வு பேரணி
X

பாலினம் அறியும் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகாசண்முகம் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.

ஈரோட்டில் பாலினம் அறிதல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் சார்பில் கருவுறுதலுக்கு முன் மற்றும் பின் பாலின தேர்வு தடை செய்யும் சட்டம் 1994ஐ பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இப்பேரணியானது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) அலுவலகத்தினை சென்றடைந்தது. இப்பேரணியில் "பாதுகாப்போம், பாதுகாப்போம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்", "கொல்லாதே கொல்லாதே பெண் சிசுவை கொல்லாதே", சொல்லாதே சொல்லாதே பாலினத்தை சொல்லாதே" "செல்லாதே செல்லாதே சிறைச்சாலைக்கு செல்லாதே" "கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா கண்டறிவது தடை சட்டம் 1994"ஐ பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஈரோடு நந்தா செவிலியர் கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை எந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பேரணியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகாசண்முகம், மகப்பேறு மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Oct 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!