ஈரோடு: 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்

ஈரோடு: 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்
X

இன்று அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டத்தில் 12-14 வயதுடைய 66 ஆயிரத்து 300 சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் 12 முதல் 14 வயது உடைய சிறார்களுக்கு, இன்று முதல் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில், 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66,300 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இன்று முதல், தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று முதல் தினமும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் செலுத்தப்பட்டு வரும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டு சிலமணி நேரம் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தனர். 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!