/* */

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது..!

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது..!
X

2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டதையும், 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததையும் படத்தில் காணலாம்.

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தொடர்ச்சியாக ஈரோட்டுக்கு ரயிலில் கஞ்சாவை கடத்தி வருவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் ஈரோடு மது விலக்கு போலீசார் சென்னையில் இருந்து ஈரோடு வந்த குறிப்பிட்ட அந்த ரயிலில் சேலத்தில் ஏறி குறிப்பிட்ட அந்த வாலிபரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

தொடர்ந்து, அவர் யாரிடம் கஞ்சாவை கொடுக்கிறார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பதை கண்டறிய ஈரோடு ரயில் நிலையத்துக்கு வெளியிலும், மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் வந்த வாலிபர் ஈரோடு ரயில் நிலையம் வந்ததும் ரயிலை விட்டு இறங்கி வெளியில் வந்தார். தான் கொண்டு வந்த பையை மற்றொரு வாலிபரிடம் கொடுத்தார்.

அப்போது சேலத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்த போலீசாரும், ரயில் நிலையத்துக்கு வெளியில் காத்திருந்த போலீசாரும் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் அவர்களை ஈரோடு மாவட்ட மதுவிலக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (வயது 32) என்பதும், அடிக்கடி ஈரோடு வந்து செல்லும் அவர் அங்கிருந்து ரயில் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்து, ஈரோட்டில் விற்பனைக்கு வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.

ஈரோட்டில், மனோஜ்குமாரிடம் சுஞ்சாவை வாங்கிச் செல்ல வந்திருந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமான்குமார் (வயது 35) என்பதும் அவரிடம் மனோஜ் குமார், அவ்வப்போது வந்து கஞ்சா கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து மனோஜ்குமார், அமான்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 24 May 2024 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
  2. வந்தவாசி
    நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. செங்கம்
    பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள்...
  4. கலசப்பாக்கம்
    அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
  5. நாமக்கல்
    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
  7. திருவண்ணாமலை
    டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்