ஈரோடு மாநகரில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம்

ஈரோடு மாநகரில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம்
X

ஈரோடு சம்பத் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 11 அடி விநாயகர் சிலையையும், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வைக்கப்படுள்ள விநாயகர் சிலையையும் படத்தில் காணலாம்.

ஈரோடு மாநகரில் இன்று (10ம் தேதி) மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடக்கவுள்ளது.

ஈரோடு மாநகரில் இன்று (10ம் தேதி) மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடக்கவுள்ளது.

ஈரோடு மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடந்த 7ம் தேதி இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 134 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு 3 நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று (10ம் தேதி) செவ்வாய்க்கிழமை மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

ஈரோடு சம்பத் நகர் நால்ரோட்டில் இருந்து விநாயகர் ஊர்வலம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது. பின்னர், பெரியவலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர். கே.வி சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், கருங்கல் பாளையம் போலீஸ் சோதனை சாவடி வழியே காவிரி ஆற்றின் பழைய பாலம் பகுதிக்கு சென்றடைகிறது. அதன் பின்னர் அங்கு ஒவ்வொரு சிலையாக ஆற்றில் கரைக்கப்படுகிறது.

மேலும், இந்த ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. ஊர்வலத்தின் போது மட்டும் சில மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்று பாதையில் திருப்பி விடப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil